மத்திய மாநில அரசு மற்றும் தனியார் துறைகள் எல்லாவற்றிலும் பெண்கள் சுடிதார் அணியும் வழக்கம் வந்து விட்டது. ஐ டி துறைகளில் மட்டுமல்ல,பேங்க். போஸ்ட் ஆபீஸ், கவர்மன்ட் ஆபீஸ்களிலும் பெண்கள் சுடிதார் அணிந்து வருகிறார்கள். ஓடிப்போய் பேருந்தை பிடிக்க வசதியாகவும் உடல் முழுதும் மறைக்கக்கூடிய, எளிய, கண்ணியமான, தன்னம்பிக்கை அளிக்ககூடிய உடை சுடிதார்.
எங்களை போன்ற அரசுப் பள்ளிகளில் மட்டும் இன்னமும் சேலை கட்டும் சம்பிரதாயம் ஏன்? இந்த ராமநாதபுர மாவட்டத்தில் வெக்கை கொப்பளிக்கும் கிராமங்களில் எவ்வித வசதியும் இன்றி அல்லல்படும் எங்களைப்போன்ற ஆசிரியர்களை கருத்தில் கொண்டு பெண்ணினத்தின் கஷ்டங்களை புரிந்துகொள்ளும் அன்னை முதலமைச்சர் ஜெயலலிதா ஆசிரியர்களும் சுடிதார் அணிய அனுமதி வழங்கக் கூடாதா? பெண்ணினமே உங்களை வாழ்த்தி வணங்கும்.
No comments:
Post a Comment